உள்ளாட்சி தினத்தையொட்டி பெரியபிள்ளை வலசை ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது!

தென்காசி மாவட்டம்,
கிராமசபை கூட்டங்கள் மூலம் உள்ளூர் பிரச்சனைகள் பல தீர்க்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க கிராம் சபை கூட்டங்கள் உதவியாக இருக்கின்றன.
இந்தநிலையில், தென்காசி மாவட்டம், பெரியபிள்ளை வலசை ஊராட்சியில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் நத்தடு அம்மாள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவண சண்முகம் கலந்து கொண்டு அரசின் நலத் திட்டங்களை பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். அப்போது கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து நிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஊராட்சி செயலர் செல்லப்பா நன்றி கூறினார்.