BREAKING NEWS

கோவில்பட்டியை சேர்ந்த கார் பயணியருக்கு ஹெல்மெட் அபராதம் விதித்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்.

கோவில்பட்டியை சேர்ந்த கார் பயணியருக்கு ஹெல்மெட் அபராதம் விதித்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

 

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சிவன்ராஜ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இவர் கடந்த 2018 ல் தனது நண்பர் கோபால்சாமி மற்றும் இருவருடன் காரில் கோவில்பட்டி வழியாக ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளையாபுரத்திற்கு சென்றனர். அப்போது போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 

அப்போது பணியில் இருந்த (தற்போது இன்ஸ்பெக்டர் ) சிலைமணி காரை மறித்து ஆவணங்களை ஆய்வு செய்தார். இதில் காரில் உள்ளவருக்கும் காவல் ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, காரில் இருந்த முகமது யாஷீர் என்பவரை இன்ஸ்பெக்டர் தாக்கினார்.

 

பின் 2,000 ரூபாய் லஞ்சமாக பெற்று ஹெல்மெட் அணியவில்லை’ என, காரில் பயணித்தவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து ரசீது வழங்கினார். இது குறித்து சிவன்ராஜ், மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்தார்.

 

நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் நேற்றைய தினம் இவ் வழக்கில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சிலைமணிக்கு 1 லட்ச ரூபாய் அபராதமும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )