வேப்பூர் சுற்றுப்பகுதிகளில் மக்காச்சோள பயிரில் படைப்புழுக்கள் – விவசாயிகள் வேதனை.
கடலூர் மாவட்டம் வேப்பூர் சுற்றியுள்ள பெரியநெசலூர், சேப்பாக்கம், என்.நாரையூர், அடரி, களத்தூர், மாங்குளம், ரெட்டாகுறிச்சி, காஞ்சிராங்குளம், கழுதூர், பாசார், விநாயகநந்தல் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பயிர்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து வருகின்றனர்.
வனவிலங்குகளால் விலைபயிர்கள் பாதிப்படைந்து வந்த நிலையில் அடுத்ததாக, மக்காசோள பயிர்களில் படைப்புழு தாக்குதல், இதனால் தங்களது வாழ்வாதாரமே முற்றிலும் முடங்கிப்போய் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே படைப்புழு தாக்குதல் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தி தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.