திட்டக்குடி அருகே மலைக்குறவருக்கு சாதி சான்றிதழ் தராததால் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை.
மணல்மேடு கிராம மலைக்குறவர் இனத்தினர் ஜாதி சான்று கேட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி சீருடை குழந்தைகளுடன் குடும்பத்துடன் கூடை முறம் பின்னி நூதன முறையில் தர்ணா போராட்டம்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள மணல்மேடு கிராமத்தில் சுமார் 600 மலைவாழ் குறவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு சாதி சான்று தேவைப்படுவதால் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் சாதி சான்று கேட்டு பலமுறை மனு பதிவு செய்தும் சாதி சான்று மலை குறவர் என்று வழங்காமல் மிகவும் பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்து ஜாதி சான்று வழங்குவதாக கூறி மலைக்குறவர் இனத்தினர் புட்டி, மரம், காட்டு பூனை பிடிக்கும் வளையம், இடிக்கி, வலை உள்ளிட்டவைகளுடன் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் எடுத்து வந்து தரையில் அமர்ந்து குடை முறம் பின்னி பள்ளி குழந்தைகளுடன் நூதன முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த சார் ஆட்சியர் பழனி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அப்போது சிறுவன் ஒருவர் சாதி சான்று இல்லை என தன்னை பள்ளியில் சேர்க்க மறுத்து வருவதாக கூறினார் இதற்கு சார் ஆட்சியர் உரிய விசாரணை செய்து சான்றிதழ் வழங்கப்படும் என கூறினார்.
இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் பி ஜி சேகர் நகர மன்ற நகர செயலாளர், ரங்க சுரேந்தர் மங்களூர் ஒன்றிய செயலாளர், திட்டக்குடி நகர மண்ட உறுப்பினர் வெங்கடாசலம், விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, நகரத் தலைவர் எலுமிச்சை அறிவழகன், மாவட்ட செயலாளர் அருண்குமார், தமிழ்ச்செல்வன், பிரகாஷ், ஆகியோர்கள் கலந்து கொண்டு முன்னிலை வகுத்தனர்.
சார் ஆட்சியர் அளித்த பதிலை ஏற்று கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.