BREAKING NEWS

கடலூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல்.

கடலூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல்.

– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த எரப்பாவூர் கிராமத்த ஜெயவேல் கவிநிலா தம்பதியர்களின் மகன்கள் ஏழாம் வகுப்பு படித்து வரும் நித்திஷ், மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சூர்யா ஆகிய இவர்கள் இருவரும் வீட்டின் அருகில் உள்ள ஏரி பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளனர்.  

 

 அப்பொழுது சூர்யா ஏரியில் தவறி விழுந்துள்ளார். தம்பியை காப்பாற்ற நிதிஷ் ஏரியில் குதித்துள்ளான் இதில் இருவரும் ஏரியில் மூழ்கியுள்ளனர். இதனைப் பார்த்த அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக ஏரியில் இறங்கி சிறுவர்கள் இருவரையும் தூக்கிக்கொண்டு பெண்ணாடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

 

 

 அங்கு சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் . தகவல் அறிந்து வந்த ஆவினக்குடி போலீசார் சிறுவர்கள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து சிறுவர்களின் சொந்த ஊரான எரப்பாவூர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

 

 அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பியாகிய சகோதரர்கள் இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த,

 

திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான சி.வெ. கணேசன் நேரில் சென்று இரண்டு சிறுவர்களுக்கும், மலர் மாலை போட்டு அஞ்சலி செலுத்தி, சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி, உதவித்தொகை வழங்கினார்.

 

மேலும் முதல்வரிடம் தெரிவித்து தமிழக அரசின் நிவாரண நிதி பெற்றுத் தருவதாக தெரிவித்தார். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

 

 

அமைச்சரிடம் அப்போது பேசிய கிராம பொதுமக்கள் பள்ளிக்கூடம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், பேருந்து நிறுத்தம், அம்மன் கோவில் போன்ற பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரும் அதிகளவில் நடமாடக்கூடிய இடத்தில் உள்ள ஏரியை கிராவல் கொட்டி மூடுமாறு கோரிக்கை வைத்தனர்.

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இருவரும் நேரில் மூழ்கி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )