BREAKING NEWS

மயிலாடுதுறை நகராட்சி 29-வது வார்டு பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்.

மயிலாடுதுறை நகராட்சி 29-வது வார்டு பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்.

 

மயிலாடுதுறை நகராட்சி 29-வது வார்டு ரயிலடியை ஒட்டியபகுதியாக இருந்து வருகிறது. மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழையில் 29-வது செல்வநியாகர்நகர், முருகன் நகர் பகுதிகளில் உள்ள 6 தொருக்களில் குடியிருப்பு வீடுகளை மழைநீர் முற்றிலுமாக சூழ்ந்தது.

 

 

இருசக்கவாகனங்களில் கூட மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து வார்டு கவுன்சிலர் ரஜனி தனது சொந்த செலவில் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோரம் தற்காலிக வடிகால் வாய்க்காலக்ள் வெட்டப்பட்டு அங்கிருந்து மோட்டார் இஞ்சின் மூலமாக மழைநீர் காவிரிஆற்றில் வெளியேற்றும் பணி முழுவீச்சில் செய்து வருகிறார்.

 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் செல்வவிநாயகர் நகர், முருகன் நகர் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

 

 

இந்த நகர்களில் உள்ள 6 தொருக்களிலும் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் சிறிய மழை பெய்தால்கூட தண்ணீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. எனவே மழைநீர்வடிகால் அமைத்துகொடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )