கடலூர் அருகே அருந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி.
– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி இவர் நேற்று மாலை கறவை மாடுகளுக்கு சோள தட்டைகளை அறுப்பதற்காக வயலுக்குச் சென்றவர் அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
வயலுக்கு சென்ற ராமசாமி இரவு நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் வயலுக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு ராமசாமி மின்சாரம் தாக்கி பலியானது தெரியவந்தது.
நேற்று மதியம் வேப்பூர் மின்வாரிய அலுவலகத்திற்கு வயலில் மின்கம்பம் அருந்து கிடப்பதாக தகவல் சொன்னதாக கூறப்படுகிறது. மின்துறையினரின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,..
மின்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமசாமியின் உறவினர்கள் மற்றும் பெரியநெசலூர் கிராம மக்கள் விருத்தாச்சலத்தில் இருந்து சேலம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பெரியநெசலூர் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது பின்னர் மறியல் ஈடுபட்ட மக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ராமசாமியின் உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து! விசாரணை செய்து வருகின்றனர்.