BREAKING NEWS

சிவகாசி நேரு காலனியில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம் – மக்கள் பீதி.

சிவகாசி நேரு காலனியில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம் – மக்கள் பீதி.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியதுக்குட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சி நேரு காலனிக்கு அருகாமையில் உள்ள கடம்பன் குளம் கண்மாய் தூர்வாரப்படாமல் தெருவில் உள்ள கழிவு நீர் கலந்தும் குப்பைகள் கொட்டப்படுவதாலும் துர்நாற்றம் வீசி வருகிறது.

 

கண்மாயை தூர்வாரி சுத்தப்படுத்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்தும் பத்திரிகைகளின் வாயிலாக செய்திகள் வெளிவந்தும் பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகிகள் கடம்பன் குளம் கண்மாயை பராமரிக்கும் பணியை உதாசீனப்படுத்தியதால் சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறி அருகிலுள்ள நேரு காலனிக்குள் கழிவு நீர் கலந்த மழைநீர் புகுந்து பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளது.

 

 

தற்போது அப்பகுதியில் தேங்கிய கழிவுநீர் தெருக்களில் பச்சை வண்ண கலரில் தேங்கி கொசுக்கள் அதிகம் காணப்படுவதால் தொற்று நோய் பரவி விடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

 

சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்மாயை தூர்வாரி கழிவுநீர் கலப்பதை தடுத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )