வால்பாறை அடுத்த கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை தொடர் தாக்குதலில் ஈடுபடும் காட்டு யானை.
![வால்பாறை அடுத்த கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை தொடர் தாக்குதலில் ஈடுபடும் காட்டு யானை. வால்பாறை அடுத்த கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை தொடர் தாக்குதலில் ஈடுபடும் காட்டு யானை.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/IMG_20221117_133223.jpg)
வால்பாறை செய்தியாளர் கருப்பசாமி.
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்த சுற்றுலா தலங்களில் ஒன்றான கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் உள்ளது.
நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் அப்பகுதியில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானை அப்பகுதியில் உள்ள கடைகளை அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு அப்பகுதியில் கடை நடத்தி வரும் ஹரி கிருஷ்ணன் மனோரஞ்சிதம் கமலம் கண்ணன் ஆகியோர் கடைகளை சூறையாடியது.
மேலும் அப்பகுதியில் எருமை மாட்டுக் கன்று குட்டியையும் தாக்கி அதில் உயிரிழந்துள்ளது. அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதனை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள ஒற்றைக்காட்டு யானையை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டினர்.
அப்பகுதியை வால்பாறை கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் நேரில் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது