BREAKING NEWS

துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா..!

துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா..!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் தின விழாவானது கொண்டாடப்பட்டது.

 

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கருணாம்பாள் தலைமை வைத்தார். நகராட்சி கவுன்சிலர் சினேகா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் தேச தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், விவசாயி, மீனவர், மருத்துவர், செவிலிலர் போன்று பல்வேறு வேடங்கள் அணிந்து வந்தனர். இதையடுத்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

இதனைத் தொடர்ந்து திருச்சி ரோட்டரி கிளப் ஆப் ஸ்டார்ஸ் நிர்வாகிகள் வள்ளியம்மை, லாவண்யா, வெண்ணிலா ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளை வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

 

நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் கருணாம்பாள் படிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பாடல் பாடினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )