கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம் கடத்தூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் கல்வி விழிப்புணர்வு பேரணி நவம்பர் 14 முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் பள்ளியில் சேர சம உரிமை பெற்று தருவது குறித்த விழிப்புணர்வு பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் பள்ளியில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணியானது கடத்தூர் முக்கிய வீதிகள் கோவில்,பேருந்து நிலையம் வரையில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பதாதைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் ஆனந்த்ராஜ் பங்கேற்றார்.
பள்ளி இருபால் ஆசிரியர்கள் கடத்தூர் காவல்துறையினர் பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்,
CATEGORIES தர்மபுரி
TAGS கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகடத்தூர் ஒன்றியம்தமிழ்நாடுதர்மபுரி மாவட்டம்தலைப்பு செய்திகள்மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பிரச்சாரம்முக்கிய செய்திகள்