திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்க நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி அல்லிமால் தெருவில் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அர்ச்சகர் சங்க நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் வள்ளியப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான நிர்வாக செயல்பாடுகள் பற்றியும்,
உறுப்பினர்களின் தொழில் முன்னேற்றம் அடைய வங்கி கடன் பெற்று தருவது குறித்தும், ஆல் இந்தியா பெடரேஷன் இணைப்பு குறித்தும், 2023 ஆம் ஆண்டிற்கான மாத நாட்காட்டி அச்சிடுவது தொடர்பாகவும் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக செயலாளர் மோகன் அனைவரையும் வரவேற்றார் பின்னர் கூட்டத்தின் முடிவில் பொருளாளர் அப்பாஸ் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருச்சி
