மறைந்த செய்தியாளர் குடும்பத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் 44 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட தீக்கதிர் செய்தியாளர் முருகேசன் நேற்று முன் தினம் செய்தி சேகரிக்க சென்ற போது திடீரென மயக்கமடைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்கள் மற்றும் வெளி மாவட்ட செய்தியாளர்கள் சமூக ஆர்வலர்கள் இணைந்து ரூபாய் 34 ஆயிரம் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்தச் செய்தி சமூக வலைத்தளங்கள் மூலமாக தகவல் அறிந்த பாஜக பிரமுகரும், நாட்றம்பள்ளி 14 வது வார்டு கவுன்சிலருமான இல குருசேவ் அவர்கள் பேரணாம்பட்டு அடுத்த ஓங்குப்பம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ரூபாய் 10, ஆயிரம் நிதியுதவி வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS செய்தியாளர் முருகேசன்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் செய்தியாளர்கள்பாஜகமுக்கிய செய்திகள்
