BREAKING NEWS

தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்துகள் தட்டுபாடு இல்லாத அளவிற்கு தேவையான அளவு கைவசம் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்துகள் தட்டுபாடு இல்லாத அளவிற்கு தேவையான அளவு கைவசம் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெறும் குரூப்-1 எழுத்து தேர்வை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ் கூறுகையில்.

 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 26-மையங்களில் குரூப்-1எழுத்து தேர்வு நடைபெறுகிறது இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 8349-மாணவர்கள், மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் இந்த தேர்வினை கண்காணிக்க 7-மொபைல் குழுக்கள் மற்றும் வருவாய்த்துறை,காவல்துறையினர்,பிளேன் ஸ்கிடு ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.

 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவத்திற்கு தேவையான மருந்துகள் சரிவர உள்ளதா என்று சோதனை நடத்தினோம் அதில் 354-ற்கும் மேலான மருத்துவத்திற்கு தேவையான மருந்துகள் கைவசம் உள்ளது.

 

 

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவர், மாணவியருக்கு கண்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தான பாதிப்புக்கு ஆர் பி எஸ் என்ற மெடிக்கல் டீம் மூலம் ஒவ்வொரு வட்டாரத்தில் இரண்டு குழுக்கள் அமைத்து சோதனை செய்து அதன் மூலம் அங்கன்வாடி மாணவர்கள் முதல் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு ஐ டிராப் போன்ற மருந்துகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )