கடலூர் அருகே தமிழக காவல்துறை சார்பில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு விழிப்புணர்வு.!

– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையத்தில் தமிழக காவல்துறை சார்பில் நிமிர்ந்து நில் துணிந்து சொல் என்ற தலைப்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும் பொருட்டு,
மாணவிகள் துணிந்து செயல்படவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு குரல் கொடுப்பது குறித்தும் வேப்பூர், பூலாம்பாடி அரசு பள்ளி மாணவர்களிடம் காவல் உதவி ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், ராமச்சந்திரன் ஆகியோர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் வேப்பூர் போலீசார் மாணவிகளுக்கு காவல் அதிகாரிகள் அறைகள், மற்றும் கைதி அறைகள், வழக்குகள் பதியப்படும் பதிவேடுகள், வழக்குகள் விவரம், ஆகியவற்றை தெரியப்படுத்தினர். பின்பு கட்டுரை ஓவியம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம், பரிசுப் பொருட்கள் பேனா, பென்சில் உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் வேப்பூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல்நிலைக் காவலர்கள், இரு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் சத்யராஜ், பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.