அருகே பந்தநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச்,.

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வழங்கினார்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு, மாணவிகள் அமர்ந்து படிக்க தேவையான பெஞ்ச் மற்றும் மேஜைகள் பற்றாக்குறை இருந்து வந்தது. இதுகுறித்து பள்ளியின் மேலாண்மை குழு சார்பில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஊராட்சி குழு நிதிலிருந்து ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் திமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாலகுரு தலைமையில், 33 செட் மேஜை, பெஞ்ச், அரசு பள்ளிக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மேஜை, பெஞ்சை வழங்கினார்.
இதில் திருப்பனந்தாள் ஒன்றிய குழு துணை தலைவர் கோ.க அண்ணாதுரை ஒன்றிய செயலாளர்கள் மிசா மனோகரன் உதயசந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.