அரியவகை குரல்வளை கட்டி இலவச அறுவை சிகிச்சை:, எஸ்ஆர்எம் மருத்துவர்கள் சாதனை.
சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பேருந்து ஓட்டுனருக்கு குரல்வளையில் ஏற்பட்ட அறியவகை கட்டியை எஸ்ஆர்எம் மருத்துவர்கள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்துள்ளனர். இதுவரையில் இந்த அரியவகை கட்டியால் உலக அளவில் சுமார் 30பேர் மட்டுமே பாதிக்கப்
பட்டுள்ளதாக கண்டறியபட்டுள்ளது.
இது பற்றி கட்டாங்குளத்தூரில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மருத்துவம் மற்றும் உடல்நல இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்ணல் டாக்டர் ரவிக்குமார் கூறும்போது:-
சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த சென்னை பெருநகர போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சு விடுவதிலும், பேச முடியாமலும் கஷ்ட்டப்படுவதுடன் பேச்சு வராமல் சத்தம் மட்டுமே வருவதாக மருத்துவரிடம் கூறினார்.
மேலும் இதற்காக அம்பத்தூர், தேனாம்பேட்டை பகுதிகளில் உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எட்டப்படவில்லை. தொடர்ந்து சித்தா சிகிச்சை பெற்றும் அதிலும் குணமாகவில்லை என்று கூறினார்.
எஸ்ஆர்எம் மருத்துவமனையின் ஈ என் டி, தலை மற்றும் கழுத்து பிரிவு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் தொடர்ந்து அவரது தலை மற்றும் கழுத்து பகுதியை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது மூச்சுக் குழல் குரல்வளை பகுதியில் 2 செ.மீ அளவில் அரிய வகை கட்டி ஒன்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உணவுக்குழல் மற்றும் மூச்சுக்குழல் பகுதியில் இந்த கட்டி அமைந்துள்ளதால் அதனை அகற்ற முடிவு செய்து,..
எஸ்ஆர்எம் மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் செல்வராஜன் மற்றும் மருத்துவர்கள் சிவப்ரியா, கிரகலட்சுமி, ரூபேக் வைத்தீஸ்வரன் மற்றும் மயக்கவியல் நிபுணர் பேராசிரியர் காயத்ரி உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் நோயாளி மகாதேவனின் குரல்வளை பகுதியில் நுட்பமான காற்றுக்குழல் செலுத்தி அதன் மூலமாக மருந்துகள் செலுத்தி பையாப்சி அறுவை சிகிச்சை முறையில் சுமார் 10 மணி நேரம் போராடி அந்த கட்டியை சிறிது சிறிதாக நீக்கி முழுவதுமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
குரல்வளை பாதிப்பு நோயாளி மகாதேவனுக்கு எந்தவித செலவுமின்றி இலவசமாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் ஓட்டுநர் மகாதேவன் அதிலிருந்து முழுமைமாக குணமடைந்து மீண்டும் சிரமமின்றி பேசுவதிலும்,
மூச்சு விடுதலிலும் நிவாரணம் பெற்றுள்ளார். மகிழ்ச்சியோடு வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறினார்.