சிறுத்தை புலி நடமாட்டமா ? பீதியில் மக்கள். மூன்று கன்றுக்குட்டிகளை கடித்து கொன்றதால் பரபரப்பு

செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பசு மாடுகளை வளர்த்து அதை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றார்.
இவரது வீட்டில் வளர்த்து வந்த கன்றுக்குட்டிகளை தொடர்ந்து கடந்த இரு தினங்களாக கடித்து பரிதாபமாக இறந்துள்ளது.
இன்றும் அதேபோல் ஒரு கன்றுக்குட்டியை மர்ம விலங்கு கடித்து உயிரிழந்துள்ளதால் தென்மேல்பாக்கம் கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த வருவாய்துறையினர் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை, வனத்துறை அதிகாரிகள் தென்மேல்பாக்கம் கிராமத்தில் இன்று முகாமிட்டுள்ளனர்.
CATEGORIES செங்கல்பட்டு
TAGS குற்றம்செங்கல்பட்டு மாவட்டம்தலைப்பு செய்திகள்தென்மேல்பாக்கம்மர்ம விலங்கு கடித்துது உயிரிழந்துள்ளமுக்கிய செய்திகள்