சிலம்பத்தில் முதல் மூன்று பரிசுகளை வென்ற ஏற்காடு மலை கிராம பள்ளி குழந்தைகள்

சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சப் -ஜூனியர் சிலம்பம் சாப்பியன் சிப் 2022 – 2023 ஆண்டுக்கான சிலம்பம் போட்டிகள் சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஏற்காடு வலிமை சிலம்பம் பயிற்சியகம் சார்பில் பயிற்சியாளர் ராம்பிரகாஷ் தலைமையில் ஏற்காடு மலைப் பகுதியை சேர்ந்த பல்வேறு பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
இதில் ஏற்காடு நாகலூர் அரசு மாதிரி பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மஞ்சகுட்டை பகுதியை சேர்ந்த அந்தோனிராஜ் மகள் மது, 40 கிலோ எடை பிரிவில் மாவட்ட அளவில் முதல் பரிசையும், ஏற்காடு சார்லஸ் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் போட்டுக்காடு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் பொன்காவியன்,
30 கிலோ எடை பிரிவில் பரிசையும், ஏற்காடு நாசரேத் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் ஏற்காடு முருகன் நகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி மகள் ஷாலினி,
35 கிலோ எடை பிரிவில் மூன்றாம் பரிசு பெற்றனர். மேலும் பரிசு பெற்ற மாணவ மாணவிகளையும் ஏற்காடு வலிமை சிலம்பம் பயிற்சியகம் பயிற்சியாளர் ராம் பிரகாஷ் அவர்களையும் அவர்களது பெற்றோர் மற்றும் அவர்கள் படிக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.