BREAKING NEWS

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு தென்காசியில் நடைபெற்றது.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு தென்காசியில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்

 

10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் பணியாளர்களை பணி நிரந்தர படுத்த வேண்டும்: குற்றாலத்தில் நடந்த தமிழ்நாடு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்,

தமிழ்நாடு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு நடைபெற்றது. 

 

 

மாநாட்டிற்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

 

மாநில துணை தலைவர் பிரதீப் சாமுயேல் டென்னிசன், மாநில செயலாளர் ஈழவேணி, தெற்கு மண்டல பொறுப்பாளர் டாங்கே ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராஜகுருநாதன் வரவேற்று பேசினார். 

 

சிறப்பு விருந்தினராக மதுரை உயர்நீதிமன்ற கிளை மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் கலந்து கொண்டார். 

 

 

தென்காசி மாவட்ட பொருளாளர் செல்வம் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மண்டல பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், ஜெகதீசன், வைரமுத்து ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

 

மாநில இணைச்செயலாளர் அஸ்ரப் அலி, மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வபிரபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் அட்மா அலுவலர்கள் சங்க இயக்குனர் சக்திவடிவேலவன் நன்றி கூறினார்.

 

இந்த மாநாட்டில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வேளாண்மை துறைக்கு என தனி பட்ஜெட் அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது,

 

10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் பணியாளர்களை பணி நிரந்தர படுத்த வேண்டும் என்பன உள்ளிட் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )