BREAKING NEWS

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக  திறந்து வைத்தார்.

திருப்பூர் செய்தியாளர்.R. ரமேஷ்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் , பூ மார்க்கெட் , தென்னம்பாளையம் வாரச்சந்தை மற்றும் வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்டு புதியதாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன .

 

 

பணிகள் நிறைவடைந்ததை அடுத்து 75.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த கலைஞர் மத்திய பேருந்து நிலையம் , அதனை ஒட்டிய பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் , பூ சந்தை மற்றும் தென்னம்பாளையம் சந்தை ஆகிய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது .

 

 

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இந்த கட்டிடங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார் . திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வினீத் , சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )