உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தமிழில் வர்ணனை செய்யும் லால்குடி செம்பரையைச் சேர்ந்த கால்பந்து வீரர்.
திருச்சி மாவட்டம்,
கத்தாரில் நடைபெறும் 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தமிழ் வர்ணனை செய்ய உள்ள திருச்சி மாவட்டம் லால்குடி செம்பரை கிராமத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் ராவணன்.
லால்குடி மண்ணுக்கு மேலும் ஒரு பெருமை சேர்க்கும் வகையில் லால்குடி செம்பரை கிராமத்தைச் சேர்ந்த ராவணன் இந்திய கால்பந்து அணியில் விளையாடி முன்னாள் குடியரசு தலைவர் கனவு நாயகன் அப்துல் கலாமிடம் முதல் பரிசு பெற்றுள்ளார் அது மட்டுமல்லாமல் புனே அணியில் விளையாடி பல்வேறு கோப்பைகளை வென்றுள்ளார் லால்குடி மண்ணில் செம்பரை கிராமத்தில் பிறந்து தற்போது கத்தாரில் நடைபெறும் 22 ஆவது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை தமிழில் வர்ணனை செய்ய உள்ளார்.
இவர் தொடர்ந்து பல்வேறு சாதனைகள் புரிய அப்பகுதி மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
CATEGORIES திருச்சி
TAGS 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிஉலக செய்திகள்கால்பந்து போட்டி தமிழ் வர்ணனையாளர்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி மாவட்டம்முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்