திருவெறும்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகரில் கந்தர்வகோட்டை நோக்கி சென்ற கண்டைனர் லாரியானது கட்டுப்பாட்டை இழந்து உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகரில், அவுரங்காபாத்தில் இருந்து காலியான பீர் பாட்டில்களை ஏற்றி கொண்டு கந்தர்வகோட்டை நோக்கி சென்ற கன்டைனர் லாரியை டிரைவர் யாதவ் குமார் ஓட்டி வந்துள்ளார்.
இந்த லாரியானது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள எச்டி எனப்படும் உயர் மின் அழுத்த மின் கம்பத்தை இடித்து தள்ளி விட்டு…
அங்கிருந்த டீக்கடைக்குள் புகுந்து அருகில் நின்று கொண்டிருந்த ப்ரோ ஐகான் கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மின்கம்பம் முற்றிலும் சாய்ந்து கீழே விழுந்ததுடன், டீக்கடையில் பொருட்கள் சேதம் ஏற்பட்டது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்டூர் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த கன்டைனர் லாரியை கிரேன் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர்தப்பினார். இந்த விபத்து மூலமாக மின்வாரியத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் அதிகாலையில் நடந்திருப்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.