BREAKING NEWS

தஞ்சாவூர் மாவட்டம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பணி தொடக்கம், கரும்பு டன்னுக்கு ரூபாய் 4000 வழங்க விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பணி தொடக்கம், கரும்பு டன்னுக்கு ரூபாய் 4000 வழங்க விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சையை அடுத்த குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பணி இன்று துவங்கியது, இப் பணியினை எம்பி பழநிமாணிக்கம் தொடங்கி வைத்தார்.

 

நடப்பு அரவைக்கு 6,525 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டு 2 லட்சத்து 10 ஆயிரம் டன்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அரவைப்பணி துவங்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு கரும்புக்கான கிரயத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பருநாற்று, பரு கரணை மற்றும் விதை கரும்பு நடவு செய்த விவசாயிகளுக்கு முதல் கட்டமாக ரூபாய் 8.33 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 

இது குறித்து விவசாயிகள் கூறும்போது டிசம்பர் மாதத்தில் ஆண்டுதோறும் தொடங்கப்பட்ட கரும்பு அரவைப் பணி இந்த ஆண்டு நவம்பர் மாதமே தொடங்கப்பட்டுள்ளது என்றும் விவசாயிகளுக்கு தங்கு தடையில்லாமல் கரும்புக்கான நிலுவைத் தொகை இல்லாமல் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்..,

 

 

என்றும் தமிழக அரசு சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட ரூ 195 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் மேலும் கரும்பு டன்னுக்கு 4000 ரூ விலை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )