தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 இருக்கைகளை மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் வழங்கினார்.
![தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 இருக்கைகளை மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் வழங்கினார். தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 இருக்கைகளை மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் வழங்கினார்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-24-at-11.58.27-AM-e1669271619846.jpeg)
தஞ்சை சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இருக்கைகள் தேவைகள் குறித்து அறிந்த மாநிலங்களவை உறுப்பினர் S.கல்யாணசுந்தரம் தமிழ்நாடு அரசின் நமக்கு நாடு திட்டத்தின் கீழ் மற்றும் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் உதவியுடன் இணைந்து 34 லட்சம் மதிப்புள்ள 200 இருக்கைகளை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி .கே. ஜி. நீலமேகம், தஞ்சை மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் மேலாண் இயக்குனர் வேலப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம்.. ..
தமிழ்நாடு முழுவதும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கு பல்வேறு வசதிகள் முதலமைச்சர் அவர்களால் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.