BREAKING NEWS

நடுக்கல்லூரில் கொலையுண்ட நம்பிராஜன் மனைவிக்கு அரசின் பணி நியமன ஆணை நெல்லை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.

நடுக்கல்லூரில் கொலையுண்ட நம்பிராஜன் மனைவிக்கு அரசின் பணி நியமன ஆணை  நெல்லை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லூரில் கொலையுண்ட நம்பிராஜன் மனைவிக்கு அரசின் பொது சுகாதாரத்துறையில் Data Entry operator பணி நியமன ஆணையும்,

 

அவரது குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு ஆணையும் நெல்லை வருவாய் கோட்டாட்சியரால் நேரடியாக (வியாழக்கிழமை) காலை 7.30 மணியளவில் நம்பிராஜன் இல்லத்தில் அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது.

 

அரசின் சார்பில் குடும்ப நிவாரண நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் வரும் சமுதாயங்கள் பட்டியலில் தற்போது பாதிக்கப்பட்ட நம்பிராஜன் குடும்பத்தினரின் சமுதாயம் இடம் பெறாததால் நிவாரண நிதி வழங்கப்படவில்லை.

 

இந்நிலையில் நம்பிராஜன் கொலை தொடர்பாக போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இது வரை 9 பேர் கைது செய்யப்பட்டு ள்ளனர். மேலும் நம்பிராஜன் உடலை இன்று காலை அவரது குடும்பத்தினரும், சமுதாயத்தினரும் பெற்றுக்கொள்கின்றனர்.

அவர் சார்ந்த சமுதாயத்தினர் அவரது குடும்பத்திற்கு நிதி திரட்டி வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )