உலக மரபுவாரத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு.

திருநெல்வேலி,
யுனெஸ்கோ என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு என்பது நமது வளமிக்க கலாச்சார மற்றும் வரலாற்று வம்சாவளியைப் பாதுகாக்கும் மற்றும் உலகம் முழுவதும் அமைதியைப் பரப்பும் ஒரு அமைப்பாகும்.
இந்த சிறப்பு அமைப்பு உலகெங்கிலும் உள்ள மிகவும் மதிப்புமிக்க மனிதனால் உருவாக்கப்பட்ட புதையல்களைப் பாதுகாப்பதில் மகத்தான நடவடிக்கைகளை எடுக்கிறது. இந்தியாவில் யுனெஸ்கோ 29 உலக பாரம்பரிய தளங்களை பட்டியலிட்டுள்ளது, அதில் நான்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.
அவை தஞ்சை பெரிய கோயில், ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம் ,கங்கைகொண்ட சோழபுரம் பிரஹதீஷ்வரர் கோயில், மகாபலிபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழு, நீலகிரி மலை ரயில்வே, மேற்கு தொடர்ச்சி மலை, ஆகிய இடங்களின் புகைப்படங்கள் மற்றும் அவற்றைப்பற்றிய தகவல்கள் அடங்கிய கண்காட்சி எற்பாடு செய்யப்பட்டுருந்தது.
இக்கண்காட்சியினை நாங்குநேரி, புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். நெல்லை மாவட்டக் காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி, அவ்விடங்கள் பற்றிய வரலாற்றுச் சிறப்புக்களை மாணவ-மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் மாணவர்களுக்கு அருங்காட்சியகம் முழுவதும் சுற்றி காட்டப்பட்டு பாளையங்கோட்டையில் வரலாற்று சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்தார்.