வண்டலூர் அருகே இருசக்கர வாகனம்மீது கார் மோதி தாய் மகள் பலி..
![வண்டலூர் அருகே இருசக்கர வாகனம்மீது கார் மோதி தாய் மகள் பலி.. வண்டலூர் அருகே இருசக்கர வாகனம்மீது கார் மோதி தாய் மகள் பலி..](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-25-at-9.42.34-AM.jpeg)
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 45), இவரது மகள் கிருத்திகா (வயது 20), இவர்கள் இருவரும் நேற்று இரவு வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் சாய்பாபா கோவிலுக்கு செல்வதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
வண்டலூர் மேம்பாலம் இறக்கத்தில் செல்லும்போது பின்னால் மின்னல் வேகத்தில் வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் மொபட் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட தாய், மகள் இருவரும் பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்தில் உயிரிழந்த தாய், மகள் இருவரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.