BREAKING NEWS

செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை லிஃப்ட் பழுது…. பத்திரமாக மீட்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள்

செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை லிஃப்ட் பழுது….  பத்திரமாக மீட்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள்

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு.

செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார்  2-ஆயிரத்திற்தும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், 5ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் புறநோயாளிகளாகவும் வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, கொரோனா பரிசோதனை, இருதய பரிசோதனை, உள்ளிட்ட 26 சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் இந்த மருத்துவமனை எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.

 

 

இந்நிலையில் நோயாளிகளை காண வந்த உறவினர்கள் மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் இருந்து தரை தளத்திற்கு வருவதற்காக லிஃப்டில் 10பேர் ஏறியுள்ளனர். லிஃப்டு கீழ்நோக்கி இறக்க துவங்கியதும் பாரம் தாங்காமல் அருந்து லிஃப்ட் பழுதாகி பாதியில் அந்தரத்தில் நின்றது.

 

 

உடனடியாக லிப்டில் இருந்தவர்களின் அலரல் சத்தம் கேட்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக லிப்டை உடைத்து உள்ளிருந்தவர்களை பாத்திரமாக மீட்டனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

தகவலறிந்து செங்கல்பட்டு தீயணைப்புதுறை மற்றும் நகர காவல்துறையினர் சமபவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கடந்த மூன்று மாதம் முன்பு இதே லிஃப்ட் பழுதாகி ஊழியர்கள் உள்பட சிக்கியது குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )