BREAKING NEWS

காட்டூர் சோதனை சாவடி அருகே டிப்பர் லாரி மீது அரசு மாநகரப் பேருந்து மோதி விபத்து.

காட்டூர் சோதனை சாவடி அருகே டிப்பர் லாரி மீது அரசு மாநகரப் பேருந்து மோதி விபத்து.

திருச்சி துவாக்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி பயணிகளை ஏற்றி கொண்டு அரசு மாநகரப் பேருந்து ஒன்று காட்டூர் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தது.

 

அப்போது பேருந்திற்கு முன்னால் சென்ற டிப்பர் லாரி ஒன்று திடீரென பிரேக் அடித்து நிறுத்தப்பட்டது இதனால் பின்னாடி வந்த அரசு மாநகரப் பேருந்து மோதியது.

 

 

இதில் பேருந்தில் இருந்த முன் பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கி விழுந்தது இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவருக்கும் பயணிகளுக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

 

 

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அரியமங்கலம் போலீசார் பேருந்தையும் டிப்பர் லாரியையும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் அங்கிருந்து அகற்றினர். மேலும் இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )