BREAKING NEWS

அழிந்து வரும் விவசாயம் மீட்டெடுப்பது எப்படி களத்தில் அரசு பள்ளி மாணவிகள்.

அழிந்து வரும் விவசாயம் மீட்டெடுப்பது எப்படி களத்தில் அரசு பள்ளி மாணவிகள்.

திருநெல்வேலி,

மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர் எப்படி ஆதாரமோ அதை போல் உணவு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது வளர்ந்து வரும் காலகட்டத்தில் பயிர்கூட நவீனமயமாக்கப்பட்ட உள்ளதால் விவசாயமும் அடியோடு அழிந்து வருகிறது.

 

 

மேலும் நம் உணவு பழக்க வழக்கங்களும் மாறி வருகிறது அழிந்து வரும் விவசாயத்தை தற்போது உள்ள தலைமுறைகளுக்கு கற்றுக்கொள்ளும் வகையில் நெல்லை டவுண் கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நாட்டு நலத்திட்ட பணி மாணவிகள் சொக்கடான் தோப்பில் உள்ள வயல்வெளிகளில் நாற்று நடும் விவசாயிகள் உடன் ஒரு நாள் விவசாயத்தில் ஈடுபட்டு கற்றுக் கொண்டனர்.

 

 

அப்போது விவசாயம் கற்றுக்கொண்ட மாணவிகள் தெரிவிக்கும் போது விவசாயத்தில் இவ்வளவு கடினமான வேலை இருப்பது என்பது இவர்களுடன் வேலை பார்க்கும் போது தான் தெரிகிறது அதன் வலியும் புரிகிறது விவசாயம் செய்தால் தான் உயிர்வாழ முடியும் என்ற முக்கியமும் தெரிகிறது.

 

 

மேலும் சாதம் சாப்பிடும் போது அதிக அளவில் சாதத்தை மிச்ச படுத்துவோம் இவர்கள் படும் வேதனை தெரிந்த பிறகுதான் இனிமேலும் சாதத்தை வீணடிக்க மாட்டோம் என அந்த மாணவி குறிப்பிட்டார் மேலும் அனைத்து மாணவ மாணவிகளும் விவசாயத்தை கற்று அந்த விவசாயத்தை காப்போம் என உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் நந்தினி செய்திருந்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )