செங்கல்பட்டில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவம் வழங்க போதுமான ஏற்பாடு இல்லை.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.
அடுத்தடுத்து இரண்டு பசுமாடுகள் போதுமான சிகிச்சை அளிக்காமல் பரதவிப்பு..
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடமாடும் கால்நடை அவசர ஊர்தி இல்லாததால் சாலையில் அடிபடும் ஆடு, மாடுகள் போன்ற உயிரினங்கள் காப்பாற்றப்படுவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.
நேற்று பிரசவத்திற்காக செங்கல்பட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பசுமாடு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தாயின் வயிற்றில் சிக்கிக்கொண்ட கன்றுகுட்டியின் இரண்டு கால்கள் மட்டும் வெளியில் தொங்கியபடி மருத்துவமனையில் இருந்து நடந்தே வந்து ஒரு காட்டுப்பகுதியில் படுத்து பிரசவத்திற்காக அந்த பசுமாடு பட்ட வேதனை பார்ப்பவர்களை பதறவைத்தது.
இறுதியாக கன்றுகுட்டியை மட்டும் உயிரிழந்த நிலையில் மாட்டின் வயிற்றில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. பசுமாடு மட்டும் காப்பாற்றப்பட்டது.
இதேபோல் இன்று கால்நடை மருத்துவமனை எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆறு மாத கர்ப்பிணி பசுமாடு முதுகெலும்பு உடைந்த நிலையில் பலமணிநேரமாக உயிருக்கு போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு கால்நடை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாதது ஒரு பக்கம் இருந்தாலும் இதுபோன்று சாலையில் அடிப்படும் மாடுகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை அவசர ஊர்தி இல்லாதது பேரதிர்ச்சியாக உள்ளது.
தற்போது குறைந்த அளவில் உள்ள நாட்டு மாடுகள் சாலையில் அடிபடுவது உயிரிழப்பது அனைத்து பகுதிகளிலும் இயல்பாகவே பார்க்கப்படுகிறது.
நகரப் பகுதிகளில் கால்நடைகள் வாகனங்களில் விபத்தில் சிக்காமல் இருந்தாலும் கிராமப் பகுதிகளில் அதிக அளவில் கால்நடைகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பது வேதனை அளிக்கிறது.
எனவே அரசு உடனடியாக கால்நடைகளை காப்பாற்ற வேண்டும் என்றால் கால்நடை அவசர ஊர்தி மற்றும் நடமாடும் கால்நடை மருத்துவமனை போன்ற வசதிகளை ஏற்படுத்தினால் மட்டுமே மீதமுள்ள உயிரினங்களை காப்பாற்ற முடியும் என சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது..