BREAKING NEWS

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வழிப்பாட்டுரிமை பாதுகாப்புக்கான

 

மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் அல்ஜலால் வரவேற்றார்.

 

மமக மாவட்ட செயலாளர் ருசி மைதீன், துணைத்தலைவர் முஹம்மது சலீம் இஸ்லாமிய அழைப்பாளர் முஹம்மது ரிபாயி, மாவட்ட துணை செயலாளர்கள்: சேக் அஹமத்,நூருல் அமீன், பஜ்ருல் நூர், முஜிபுர் ரஹ்மான், இர்ஷாத் அலி,வீரமணி ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

 

 

சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் ஹமீது,மாநில துணைப் பொதுச்செயலாளர் பாதுஷா, தலைமை பிரதிநிதி சரவண பாண்டியன்,காங்கிரஸ் மாவட்ட தலைவர் டி.ஆர்.லோகநாதன்,மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் முருகன்,வி.சி.க.மண்டல செயலாளர் விவேகானந்தன், சி.பி.எம்.மாவட்ட செயலாளர் பாரதிசின்னை.பாண்டியன்,தி.க.மாவட்ட செயலாளர் நிம்மதிஆகியோர் கண்டன உரையாற்றினர்.

 

 

450 ஆண்டு காலம் அயோத்தியில்

பாபரி மஸ்ஜிதை சங்பரிவார மதவெறி பாசிஸ்டுகள் இடித்து தரை மட்டமாக்கினர். உச்சநீதிமன்ற உத்தரவுகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, இதற்காக ஆறு மாநிலங்களில் பாஜக அரசு கலைக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. அன்றைய பிரதமர் நரசிம்மராவ், ஒரே ஆண்டில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் அரசாங்கமே புதியபள்ளிவாசலைக் கட்டித்தரும் என வாக்குறுதி அளித்தார். உலக அதிசயமான தாஜ்மகாலையும் கூட விட்டு வைப்பதாக இல்லை

 

பாபரி மஸ்ஜித் வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை ரஞ்சன் கோகய் பாஜகவால் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்திய அரசியல் சாசனம் இந்தியக் குடிமக்களுக்கான உரிமைகளை சமமாகவே தந்துள்ளது. அதில் வழிபாட்டுரிமையும் தலையாயது. வழிபாட்டுரிமையை சிறுபான்மை மக்களிடம் இருந்து அடியோடு பறிக்கத் திட்டமிடும் பாசிஸ்டுகள் இப்போது களமிறங்கியுள்ளனர்.

 

 

இந்நிலையில் அரசியல் சாசனம் அனைவருக்கும் அளித்துள்ள உரிமைகளைப் பாதுகாத்திட பாபரி மஸ்ஜித் சங்பரிவார பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் காக்கும் தமுமுக, வழிபாட்டுரிமை பாதுகாப்புக்கான மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பபட்டத்தை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தொடர்ந்து..

 

அனைத்து சமூதாய மக்களின் உரிமைகளையும் பாதுகாத்திட நடத்தப்படும் ஆர்பாட்டத்தில் திரளான ஆண்கள், பெண்கள் உள்பட மதவெறியை மாய்ப்போம், மனிதநேயம் காப்போம் என கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் பொகர்தீன் நன்றி கூறினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )