தமிழ்நாட்டில் சிறந்த அரசு பள்ளியாக சரந்தாங்கி நடுநிலைப்பள்ளி தேர்வு – எம்.எல்.ஏ வெங்கடேசன் பாராட்டு.

2020 -21ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியானது. 38 மாவட்டங்களில் இருந்து தலா 3பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அப்பள்ளிக்கு வருகைதந்து அங்கு நடைபெற்ற பாராட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறந்த பள்ளியாக தேர்வு பெற்றதற்கு பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட அவை தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி, ஒன்றிய துணை சேர்மன் சங்கீதா மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாய அணி நடராஜன், பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், நகர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி துணை சேர்மன் சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துராமன், செந்தில் குமார், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.