உதயம் சமூக சேவை நிறுவனத்தில் இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில், உதயம் சமூக சேவை நிறுவனத்தில் இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு வருடாந்திர கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில்பொருளாளர் ரெஜினா வரவேற்புரையாற்றினார்,
செயலாளர் இருதயசாமி பேசுகையில்;
முன்று வருடத்தில்10 லட்சம் இளைஞர்கள் பழங்குடி பெண்கள் நலம் மற்றும் எச்ஐவி எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகத்தில் சாதனை படைத்து வருகிறோம் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய, நிரஞ்சன், விவசாய திட்டங்கள் அதன் பயன்பாடுகள் குறித்து பேசினார், விமல்ராஜ், மாற்றுத்திறனாளிகள் செயல்பாடுகள் குறித்தும் அருட்தந்தை பவுல்ராஜ், உதயம் சமுக நிர்வனத்தின் பணிகள் குறித்தும் பேசினார், ஷோப, செல்வி, பூஜாஉள்ளிட்டர் கலந்து கொண்டனர்,
கூட்டத்தின் தீர்மானமாக தொண்டு நிறுவன உறுப்பினர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் இன்சூரன்ஸ் காப்பீட்டு திட்டம் செயல்படுத்திட வேண்டும் 60 வயதுக்கு மேல் ஓய்வூதியம் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பிள்ளைகளுக்குகல்வி உதவி இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானமாக ஏற்றினர்.
கூட்டத்தின் முடிவில் சுந்தரேசன் நன்றி கூறினார், கூட்டத்தில்ஆண்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.