சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே பாதையில் காதல் ஜோடிகள் சடலம். ரயில்விபத்தா. தற்கொலையா. போலீசார் விசாரணை.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே பாதையில் ஒரு காதல் ஜோடிகள் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் மறைமலைநகரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் (24) கபடி வீரர் என்பதும்,
அதேபோல் அலெக்ஸுடன் இறந்து கிடந்த பெண் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் (20)என்பதும் முதல்கட்ட தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் சிங்கபெருமாள் கோயில் அடுத்த பேரமனூர் பகுதியில் தனித்தியாக தங்களது நண்பர்களுடன் வசித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதால் ஒன்றாகவே வேலைக்கு செல்வதும் இருவரும் காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் அடிக்கடி இரவு நேரங்களில் ரயில்வே பாதையையொட்டி மக்கள் நடந்து செல்லக்கூடிய பாதையில் அமர்ந்து பேசுவதை வழக்கமாக இருந்துள்ளனர், எப்போதும் போல் நேற்றிரவு அலெக்ஸ், ஷெர்லின் ரயில்வே பாதை அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இருவரும் இரயில்வே பாதையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளனர்.
தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் காதல் ஜோடிகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இச்சம்பவம் தற்கொலையா அல்லது அலெக்ஸ், ஷெர்லின் ஆகியோர் இரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது எதிர்பாராத விதமாக இரயில்மோதி இறந்தனரா என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் கூடுதல் விசாரணையை துவக்கியுள்ளனர்.