ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நூத்தல்லாபுரம் ஊராட்சி இப்பகுதியில் உள்ள சின்னமநாயக்கன் கோட்டை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதி மக்கள் விவசாயத்தையும் விவசாயக் கூலிகளையும் மற்றும் நம்பி வாழ்ந்து வருகின்றனர் என் நிலையில் ஊராட்சி நிர்வாகத்தால் பொதுமக்களுக்காக வழங்கப்படும் குடிநீர் பல வாரங்களாக வழங்கப்படவில்லை என்றும்.,
ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதாலல் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் யாகப்பன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியதை எடுத்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் பெண்கள் திடீர் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தியதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.