வேப்பூர் அருகே வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு அளிக்கும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூர் பிஎஸ்வி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமாரசெல்வகுமாரி ரகுநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பொருட்டு இந்த தொழில் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.

பயிற்சியில் தேர்வான நபர்களுக்கு சேர்க்கை சான்றிதழை மாவட்ட மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் கஸ்பர் வழங்கினார் மேலும் முகாமில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்நிகழ்வில் வட்டார இயக்க மேலாளர் திருநாவுக்கரசு மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
