ஊழல் முறைகேடுகள் குறித்து நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாநகராட்சியில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நகல் மற்றும் நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர. வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் சாலை, அண்ணாசாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. ஆந்திரா போன்ற பிற மாநிலங்களுக்கு ஒரு வாரம் கடைகள் போட்டார்கள்.
இந்த கடைகளுக்கு பல ஆயிரம் ரூபாய் வாடகை வசூலிக்கப்பட்டது. அப்போது வியாபாரிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் விடவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது அன்றைய நாளிதழில்களில செய்தியாக வந்தது.
இதனை அடுத்து பாஜக நிர்வாகி கோவிந்தராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாநகராட்சி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். திபாவளிக்காக போடப்பட்ட தற்காலிக கடைகளுக்கு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டதா, எனவும் வரி எவ்வளவு வசூலிக்கப்பட்டது.
என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்த அனுமதியும். வழங்கவில்லை என மாநகராட்சி பதில் அளித்து உள்ளது. இதனையும் தீபாவளி சமயத்தில் நாளிதழ்களில் வந்த செய்தியையும் போஸ்ட்டராக அச்சிட்டு தஞ்சை நகர் முழுவதும் ஒட்டி உள்ளார் கோவிந்தராஜ், இந்த போஸ்டர் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.