ஆத்தூர் ஊராட்சியில் 50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்க அடிக்கல் நாட்டினார்
சேலம் மாவட்டம்
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அப்பமசமுத்திரம் புது உடையம்பட்டி தென்னங்குடிபாளையம் ராமநாதபுரம் கொத்தாம்பாடி ஆகிய பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்க ஒன்றிய குழு பெருந்தலைவர் பத்மினி பிரியதர்ஷினி, அடிக்கல் நாட்டினார், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆத்ம குழு தலைவர் டாக்டர். செழியன், மற்றும் ஒன்றிய பொறியாளர் ஜெயந்தி,உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
CATEGORIES சேலம்