சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக, தேனி கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக செல்லுமாறு மாற்றிவிடப்பட்டது.
![சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக, தேனி கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக செல்லுமாறு மாற்றிவிடப்பட்டது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக, தேனி கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக செல்லுமாறு மாற்றிவிடப்பட்டது.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-23-at-4.03.09-PM-e1671794381207.jpeg)
கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சர்வதேசப்புகழ் பெற்ற சபரிமலை
ஐயப்பன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த
லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று திரும்புகின்றனர். இதில் நேரத்தையும், தூரத்தையும்
குறைக்க ஏராளமானோர் தேனி மாவட்டம் கம்பம், குமுளி வழியாக கோவிலுக்குச் செல்கின்றனர்.
கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் செல்லும் நேரங்களில் இவர்களது வாகனங்கள்
லோயர் கேம்ப், குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இதை தவிர்க்கும் விதமாக, கடந்த சில ஆண்டுகளாக கூட்ட நேரங்களில் பக்தர்களின் வாகனங்களை போலீசார் மாற்றுப்பாதையில் செல்ல அனுமதித்தனர்.
இந்த ஆண்டும் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததை
தொடர்ந்து, இன்று முதல் பிற மாவட்டங்களிலிருந்து தேனி வழியாக கோவிலுக்குச் செல்லும்
வாகனங்களை கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக கட்டப்பனை, ஏலப்பாறை,
குட்டிக்கானம், முண்டக்கயம், எரிமேலி வழியாக செல்லும் விதமாகவும்,
சபரிமலையிலிருந்து தமிழகத்திற்கு திரும்பும் வாகனங்கள் முண்டக்கயம், குட்டிக்கானம்,
வண்டிப்பெரியாறு, குமுளி, கம்பம் வழியாக தேனி பகுதிக்கு செல்லுமாறும் காவல்
துறையினர் போக்குவரத்தை மாற்றி அமைத்துள்ளனர்.
போக்குவரத்து மாற்றுபாதையில் செல்வதை கண்காணிக்கவும், பக்தர்களின் பாதுகாப்பிற்கும்
கம்பம் ஏ எஸ் பி மதுக்குமாரி மற்றும் இன்ஸ்பெக்டர் சரவணன் மேற்பார்வையில்
உத்தமபாளையம் காவல்துறை துணை கோட்டத்திலிருந்து சுமார் 100 போலீசார் கண்காணிப்பு
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.