BREAKING NEWS

வேப்பூரில் அனுமதியின்றி பனைமரம் வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார்.!

வேப்பூரில் அனுமதியின்றி பனைமரம் வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார்.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.

கடலூர் மாவட்டம், வேப்பூர் – சேலம் மார்க்கமாக உள்ள ஓடை நீர்நிலைப்பகுதியில் அனுமதியின்றி 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பழக்கடை. ஜெயபால் தலைமையில் கட்சியினர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

 

அப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சேலம் சாலையில் வேப்பூர் முதல் பெரியநெசலூருக்கு இடையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடை நீர்நிலை புறம்போக்கு உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

 

சுற்றுச்சூழலுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது, நெடுஞ்சாலையின் ஒட்டிய நிலத்தின் மதிப்பை கூட்டுவதற்கு ஒரு நில வணிக நிறுவனம் இச்செயலை செய்திருக்கிறது, இயற்கை நமக்கு அளித்த வளங்களை ஒவ்வொரு தனிநபரும் அழித்தால் வருங்கால சந்ததிகள் இம்மண்ணில் எப்படி வாழ்வது எனவே இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

எடுக்க தவறினால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

அப்போது ஒன்றிய அமைப்பு செயலாளர் கண்ணபிரான், ஒன்றிய நிர்வாகிகள் அருள், ராமஜெயம்,பிரகாஷ், மணிகண்டன், வேப்பூர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

 

CATEGORIES
TAGS