BREAKING NEWS

கரும்பு இடம்பெறாத பொங்கல் தொகுப்பை அறிவித்த அரசை கண்டித்து, எடப்பாடி பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கரும்பு விவசாயிகள் போராட்டம்.

கரும்பு இடம்பெறாத பொங்கல் தொகுப்பை அறிவித்த அரசை கண்டித்து, எடப்பாடி பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கரும்பு விவசாயிகள் போராட்டம்.

 

தை திருநாளாம் தமிழர் திருநாளன்று தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பருப்பு, புளி உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

 

தற்போதைய திமுக அரசு பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் பொங்கல் தொகுப்பாக அறிவித்தது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த வருடம் பொங்கல் தொகுப்பில் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பி தமிழக முழுவதும் ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டனர்.

 

ஆனால் திமுக அரசு தற்பொழுது பொங்கல் தொகுப்பில் கரும்பு அறிவிக்காததால் கரும்பு சாகுபடி செய்து விவசாயிகள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அந்த வகையில் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு விவசாயிகள் பூலாம்பட்டி பேருந்து நிலையத்தில் திமுக அரசை கண்டித்தும்,

 

பொங்கல் தொகுப்பில் கரும்பை சேர்க்க வலியுறுத்தி செங்கரும்பு விவசாயிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கையில் கரும்புகளை ஏந்தி படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திடீர் பூலாம்பட்டி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

CATEGORIES
TAGS