விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிவாரண தொகை – அமைச்சர் ஐ-பெரியசாமி வழங்கினார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு திரும்பும் வழியில் குமுளி மலைச்சாலையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் எட்டு ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்.
ஏழு வயது சிறுவன் ஹரிஹரன் மற்றும் அவரது தந்தை ராஜா ஆகியோர் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த 8 பேரின் வீடுகளுக்கே வந்து தமிழக அரசின் உத்தரவுப்படி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குடும்பத்தினரிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிததியிலிருந்து தலா 2 லட்ச ரூபாய் நிவாரணதொகையை வழங்கினார்.
குடும்பத்தினர் ஒவ்வொரு வரையும் சந்தித்து ஆறுதல் கூறிய அவர் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா இரண்டு லட்ச ரூபாயும் காயமடைந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கு தலா 50,000 ரூபாய் என ஒரு லட்ச ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்குகிறார்.