BREAKING NEWS

மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்.

மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், உடுமலை கேலக்ஸி ரோட்டரி சங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறியும் சோதனை மருத்துவ முகாம் உடுமலை தேஜஸ் மஹாலில் நடைபெற்றது.

 

இம் முகாமில் உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத் தலைவர் சத்யம் பாபு, உடுமலை கேலக்ஸி ரோட்டரி சங்கத் தலைவர் பொன்ராஜ் மற்றும் ரோட்டரி நண்பர்கள் சக்ரபாணி, கணேஷ்குமார், மணிகண்டன்,நாகராஜ், முருகதாசன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி ஆளுநர்கள் ஆனந்த் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 

ஹீல் திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் அனந்தகிருஷ்ணன், மண்டல ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தி வீணா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

இம் முகாமில் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மகளிர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இம் முகாமில் 31மகளிருக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியும் சோதனையும் 49 மகளிருக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறியும் சோதனையும் நடத்தப் பட்டது.

 

CATEGORIES
TAGS