BREAKING NEWS

கேலிச்சித்திரம் வரைவதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு.

கேலிச்சித்திரம் வரைவதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு.

திருப்பூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடந்தது. இதில் உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரா. ஹரிசுதன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

 

தொடர்ந்து இவர் மாநிலப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். ஒன்பதாம் வகுப்பு மாணவரான ஹரிசுதன் கேலிச்சித்திரங்களை வரைந்து காட்சிப்படுத்தி தனது பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவ மாணவர்களிடையே வாழ்த்து பெற்றதை அடுத்து இவரை மாவட்ட அளவில் நடக்கும்.,,

 

 

திருவிழாவில் கேலிச்சித்திரங்கள் வரையும் போட்டியில் கலந்து கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர் சதீஷ்குமார் ஓவிய ஆசிரியை மகேஸ்வரி ஆகியோர் உற்சாகப்படுத்தியதை தொடர்ந்து இவர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.

 

தொடர்ந்து இவர் மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் கலந்து கொண்டு வந்துள்ளார். புகையால் ஏற்படும் தீமைகள் மற்றும் இயற்கையை காப்பது மரம் வளர்த்தல் போன்ற கேலிச்சித்திரங்களை தனக்கே உரிய தனி திறமையால் வரைந்து அசத்தியுள்ளார்.

 

மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற இவரை பள்ளி தலைமை ஆசிரியர் சதீஷ்குமார், ஓவிய ஆசிரியை மகேஸ்வரி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தவேணி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.

 

CATEGORIES
TAGS