BREAKING NEWS

40 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய தேவசேரி கிராம கான்மாய் – கிராம் மக்கள் மலர் தூவி வரவேற்பு

40 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய தேவசேரி கிராம கான்மாய் – கிராம் மக்கள் மலர் தூவி வரவேற்பு

 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தேவசேரி கிராமத்தில் இருக்கும் பழமையான கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாமல் 40 ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு போய் இருந்தது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த ஊர் விவசாயிகள் சாத்தியார் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை கண்மாய்க்கு கொண்டு வந்து நிரப்புவதற்கு கடும் முயற்சி செய்தனர்.

 

அதன் பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட கிராம மக்கள், விவசாயிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கும், பத்திர பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோரிடமும் கோரிக்கை மனுக்கள் கொடுத்து சாத்தியார் அணை தண்ணீரை திறந்து எங்கள் கண்மாய்க்கு விட வேண்டும் என அனுமதி கேட்டனர்.

 

 

இந்த ஆண்டு மட்டும் சாத்தியார் அணை ஆறு முறைக்கு மேல் முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து வந்தது. இருப்பினும் இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் செல்லூர், வண்டியூர் கண்மாய்களுக்கும், வைகை ஆற்றிலும் சென்று பயனற்று போகிறது. இது குறித்து மீண்டும் மாவட்ட நிர்வாகத்திடமும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

 

அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் , அமைச்சர், ஆகியோரின் முழு முயற்சியால் சாத்தியார் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் தேவசேரி கண்மாய்க்கு வழங்குவது தொடர்பாக ஆயக்கட்டு விவசாயிகளிடம் முறையான பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் தூர்ந்து போன வாய்க்கால்களை மீண்டும் தூர்வாரி தேவேசரி கண்மாய்க்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தண்ணீரை கொண்டு வந்து கண்மாயை நிரப்பினர். தற்பொழுது இந்த கண்மாய் 40 வருடத்திற்கு பின்னர் முழுமையாக நிரம்பியுள்ளது.

 

தொடர்ந்து கிராம காவல் தெய்வமான வேலப்பன் அய்யனார் கோவிலில் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் கிராம மக்கள் ஆரவாரத்துடன் மலர் தூவி தண்ணீர் நிரம்பிய மறுகால் பகுதிக்கு சென்று மரியாதை செலுத்தினர்.

 

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி சசி. கண்மாய் பாசன தலைவர் பாஸ்கரன், சூரி, ராஜேந்திரன், உள்ளிட்ட கிராம மக்கள் விவசாயிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் சாத்தியார் அணை தண்ணீர் கொண்டு வந்து கன்மாய் நிரப்பியதற்கு அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS