BREAKING NEWS

இன்ஜின் கோளாறு காரணமாக தஞ்சையில் இருந்து மாற்று இஞ்சின் கொண்டுவரப்பட்டு ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு இரயில் புறப்பட்டது.

இன்ஜின் கோளாறு காரணமாக தஞ்சையில் இருந்து மாற்று இஞ்சின் கொண்டுவரப்பட்டு ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு இரயில் புறப்பட்டது.

இன்ஜின் கோளாறு காரணமாக நடுவழியில் திருச்சிராப்பள்ளி விரைவு இரயில் நிறுத்தம். தஞ்சையில் இருந்து மாற்று இஞ்சின் கொண்டுவரப்பட்டு ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு இரயில் புறப்பட்டது.

 

மயிலாடுதுறையில் இருந்து காலை 8.15 மணிக்கு திருச்சிக்கு திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. சனி – ஞாயிறு தவிர மற்ற தினங்களில் இந்த ரயில் கும்பகோணம் தஞ்சை திருச்சி ஆகிய இடங்களுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் அலுவலக நேர ரயில் ஆகும்.

 

இந்த ரயில் மின்சார இஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் மின்சார கம்பிக்கும் – இஞ்சினிக்கும் இணைப்பு கொடுக்கும் கனெக்டிங் ரார்டு என்ற பகுதி சேதமடைந்த காரணத்தால் தஞ்சைக்கு முன்பு 10 கிலோமீட்டர் தொலைவில் திட்டை இடத்தில் நிறுத்தப்பட்டது. காலை 9.18 மணிக்கு திட்டை வந்து 9:28க்கு புறப்பட வேண்டிய் ரயில், பழுது காரணமாக ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டது.

 

இந்நிலையில் தஞ்சையில் இருந்து மாற்று ரயில் கொண்டு வரப்பட்டு, பெட்டியில் பழுதான இஞ்சினுடன் இணைக்கப்பட்டு, ஒரு மணி நேர தாமதமாக புறப்பட்டு சென்றது இதனால் வேலைக்கு செல்பவர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

 

CATEGORIES
TAGS