BREAKING NEWS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளுக்கு கரும்பு , வேட்டி , சேலை அனுப்பும் பணி தீவிரம்..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளுக்கு கரும்பு , வேட்டி , சேலை அனுப்பும் பணி தீவிரம்..

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.

 

அவ்வகையில் இந்த ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை முழு நீள கரும்பு மற்றும் ரொக்கமாக ரூபாய் ஆயிரம் அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

 

இதனை பெறுவதற்கான டோக்கன்கள் நியாய விலை கடை ஊழியர்களால் வீடுகளுக்கு சென்று குறிப்பிட்ட தேதி மற்றும் நேரங்களில் சென்று பெற்றுக்கொள்ளும் வகையில் கூட்ட நெரிசல் தவிர்த்து செயல்படுத்துமாறு அறிவுறுத்தியது.

 

 

இது மட்டும் இல்லாமல் அனைத்து நபர்களுக்கும் சென்றடையும் வகையில் இதனை கண்காணிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டும் அவர்களின் கீழ் இதற்கான குழு அமைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

 

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 93 ஆயிரத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 643 நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு பெற குடும்ப அட்டைதாரர்களுக்கு தோக்கன்களை வழங்கி வரும் நிலையில் ஒன்பதாம் தேதி முதல் பொருட்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளுக்கு அரிசி, சர்க்கரை ஆகியவை அனுப்பப்பட்ட நிலையில் தற்போது முழு நீள கரும்பு அனுப்பப்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து நியாய விலை கடை ஊழியர்கள் தெரிவிக்கையில் , நாள்தோறும் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்களை வழங்கி வருவதாகவும் இதனிடையே பொதுமக்களுக்கு தேவையான மாதாந்திர பொருட்களையும் வழங்கி வருவதாகவும் 9ஆம் தேதி முதல் பொங்கல் பொருட்களை அளிக்க ஏதுவாக கடைகளுக்கு பொருட்கள் வந்துள்ளது.

 

 

குறிப்பிட்ட நேரங்களில் குடும்ப அரிசிய அட்டைதாரர்கள் நியாய விலை கடைக்கு வந்து நெரிசலின்றி பொங்கல் பரிசு பொருட்களை பெற்று செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் இலவச வேட்டி சேலை வழங்கும் பணிகளையும் அந்தந்த வட்டாட்சியர்கள் அப்பகுதிகளுக்கு உட்பட்ட நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வருகின்றனர் .

 

அவ்வகையில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து 27 ஆயிரம் பேட்டி 80 ஆயிரம் சேலைகள் தற்போது புறப்பட்டு 186 கடைகளுக்கு அனுப்பி விட்டதாகவும் இன்னும் வேட்டிகள் வர வேண்டி உள்ளது அதனையும் உரிய நேரத்திற்குள் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என வட்டாட்சியர் பிரகாஷ் தெரிவித்தார்.

 

மேலும் பொங்கல் பரிசு பெறுவதில் ஏதேனும் சிக்கல் அல்லது குறைபாடு ஏற்பட்டால் , அதைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் குழுவில் புகார் தெரிவிக்கலாம் எனவும் இதற்கென இரண்டு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS