புகையில்லாமல் போகி பண்டிகை விழாவை கொண்டாட வேண்டும், திடக்கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வலியுறுத்தி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி நகராட்சி சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணியை நகராட்சி ஆணையர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புகை பூமிக்கு பகை, எரிப்பதை உடன் தவிர்ப்போம் பூமித்தாயை காப்போம்,
சுற்றுச்சூழலை பாதுகாப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.
பொது இடங்களில் பழைய கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள், துணிகள் போன்றவைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும், புகையில்லாத போகிப் பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி நடைபெற்றது.